உழைப்பாளன்


மே தின பறவை ஒன்று வாழ்த்துச் சொல்ல துடிக்குது,
ரேகை தேய்ந்த கைகளோ துளி நேரமின்றி உழைக்குது!
நீ விழிக்கும் முன்னே செல்லும் கால்கள் சக்கரம்கட்டிக் கொள்ளுது,
நீ உறங்கிப்போன பின்னர் தான் வீடுவந்து சேருது!
பலமாத உழைப்பு உன் புத்தாடை ஆகுது,
தனக்கென்று எதுவும் வாங்க மனம் எங்கு வருகுது!
காசில்லா நேரத்திலும் உனக்கு கறிச்சோறு போடுது.
கடமையைச் சுமக்கும் உழைப்பின் கஷ்டம் யாருக்கிங்கே புரியுது?
ஒருநாள் மட்டும் வாழ்த்துச்சொல்லி மறைந்துபோகும் உலகிது...
உண்மையான உழைப்பிற்கு மகுடம் யார் தருவது ?

Poem Rating:
Click To Rate This Poem!

Continue Rating Poems


Share This Poem