Missing Life partner


நீ என்னோடு பேச காத்திருந்த காலங்கள் தாண்டி இன்று நான் மட்டும் உன்னோடு பேச காத்திருக்கிறேன்
இதனால் வலுத்தது வார்த்தைகள் மட்டுமல்ல என் வருத்தங்களும் தான் நீ என்னை பார்க்கவில்லை !
அதனால் நான் வருந்தவில்லை !
நீ என்னோடு பேசவில்லை !
அதற்காக நான் சலிக்கவில்லை !ஏனோ உனக்கு தோணவில்லை !அதுவும் எனக்கு புரியவில்லை !உன்னிடம் எனக்கு கோபம் வரவில்லை !
அதை அறவே எனக்கு பிடிக்கவில்லை! நான் மகிழ்ச்சியாக இருக்க வில்லை! அதையும் உன்னிடம் காட்டவில்லை !உனக்கும் அது தெரியவில்லை !எனக்கு மது வலிக்கவில்லை !
நான் உன்னிடம் அன்பை தவிர வேறு எதுவும் கேட்கவில்லை !
ஆனால் நீ அதை ஏற்கவில்லை !
நீயும் உன் அன்பை எனக்கு கொடுக்க வில்லை !
ஏனென்றால் உனக்கு நேரமில்லை !உன்னை காயப்படுத்துவது எனது நோக்கம் இல்லை !
அந்த நிலையிலும் நான் நிற்கவில்லை !
உன் நினைவால் நான் உண்ணவில்லை !
அதையும் நீ கவனிக்கவில்லை !
நீ என்னிடம் சொன்னவை அனைத்தும் உண்மை இல்லை !
இருப்பினும் அதை நம்ப நான் மறுத்ததில்லை !
நீ என் மீது நம்பிக்கை வைக்கவில்லை!
அதை என்னால் நம்ப இயலவில்லை! உன்னை நான் எதிர்பார்க்கவில்லை!ஆனால் உன் காதல் என்னை விடவில்லை !
உன் தோளில் சாய எனக்கு தகுதி இல்லை !
இருப்பினும் என்னால் இருக்க முடியவில்லை!
உன்னை உதவாதவன் என்று நினைக்கவில்லை !
ஆனால் நீ அதை புரிந்து கொள்ளவில்லை !
இன்றுவரை நீயும் மாறவில்லை !நானும் அதில் இருந்து நகரவில்லை !இனி இல்லை என்ற வார்த்தை இல்லை !
நீ எப்பொழுதும் என் கதாநாயகன் தான் புரிந்தாலும் சரி புரியாவிட்டாலும் சரி எது என்னவென்றாலும் எப்பொழுதும் உன்னோடு நானும் என்னோடு நீயும் .

Poem Rating:
Click To Rate This Poem!

Continue Rating Poems


Share This Poem